பொதுநல வழக்கு தொடர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபா அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த குறித்த தொண்டு நிறுவனம் இதுவரை 64 பொது நல வழக்குகளை உச்சநீதிமன்றறில் தாக்கல் செய்துள்ள நிலையில் பெரும்பான்மையான வழக்குகளில் அந்நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது இல்லை.
இந்நிலையில் நீதிபதிகள் நியமன முறைக்கு எதிராக அந்த தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது கோபம் அடைந்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும், தேவையற்ற பொதுநல வழக்குகளை தொடருவதாகவும் கூறி அந்த தொண்டு நிறுவனத்துக்கு 25 லட்சம் ரூபா
அபராதம் விதித்தனர்.மேலும் அந்த தொகையை ஒரு மாதத்துக்குள் உச்சநீதிமன்றில் கட்ட செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.