இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான எவர்டன் கழகத்தின் வீரர் ஆலோன் லெனொன் உளச் சுகாதார சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சால்போர்ட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 30 வயதான லெனொனை காவல்துறையினர், தடுத்து வைத்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அழுத்தங்கள் தொடர்பான நோய்கள் தொடர்பில் லெனோனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் கைது செய்த போதிலும் லெனொன் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. லெனொன் இங்கிலலாந்து அணியையும் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.