இந்தியா – பிரித்தானியா நாடுகளுக்கிடையே உள்துறைச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி, பிரித்தானியா உள்துறைச் செயலர் பேட்ஸி வில்கின்ஸன் ஆகியோர் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இரு நாடுகள் இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், குற்ற நடவடிக்கைகள் தொடர்பான உளவுத் துறை தகவல்களை இரு தரப்பிலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை தீவிரமாக செயல்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அத்துடன் இரு நாடுகள் இடையேயான விசா நடைமுறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது வங்கிகளிலிருந்து 9 ஆயிரம் கோடி ரூபா
கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரித்தானியாவில் தலைமறைவாகியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை விரைவில் நாடு கடத்துமாறு அந்நாட்டு உள்துறைச் செயலரிடம் இந்தியா வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.