பிரித்தானியாவின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பிரதமர் திரேசா மே தனது கரத்தைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு திடீர் தேர்தலை நடத்துகின்றார்.
பாராளுமன்றை கலைப்பது குறித்து பிரித்தானிய மஹாராணியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒராண்டுக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து பிரித்தானியா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் பிரதமர் திரேசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சியை விட அதிகளவு மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.