இலங்கை

நாளைய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மஹிந்த தரப்பு ஆதரவு


அரச வைத்திய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என மஹிந்த ராஜபக்ஸவின் கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவே நாளைய தினம் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ தலைமையில் கூடிய கூட்டு எதிர்க்கட்சியினர், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும், அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு, இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாளைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள போராட்டத்திற்கு ஜே.வி.பியும் ஆதரவினை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply