முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் கடமையாற்றிய சில ராஜதந்திரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது உதவிக்காக பணியாட்களை நியமிக்க வழங்கப்பட்டிருந்த சலுகையை பயன்படுத்தி சில ராஜதந்திரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டோர் அந்நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் நாடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் கடமையாற்றிய ராஜதந்திரிகள் தனிப்பட்ட உதவியாளர்கள் என்ற அடிப்படையில் நூற்றுக் கணக்கானவர்களை வெளிநாடுகளு;கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.