தனக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தமக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் யாருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதனை சபாநாயகரும், வெளிவிவகார அமைச்சரும் தேடிப் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமக்கு இப்பொழுது 61 வயதாகின்றது எனவும், இதுவரையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல்வாதியொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வது பொருத்தமற்றது என்றே தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.