Home இலங்கை மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:-

மேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:-

by admin

காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர் தனது மேதின உரையில் ஒரு சாத்திரக்காரரைப் போல உரையாற்றியிருக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஒருநல்ல செய்திவரும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்குரிய அரசியற் தீர்வுத்திட்டம் தொடர்பில் இன்னும் இரண்டுவாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்திருப்பதாக சம்பந்தர் தனதுமேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  அவர் ஏன் அப்படிச் சொன்னார்?

மேதினத்திற்குஅடுத்தடுத்தநாள் அதாவது 3ம் திகதி யாப்புருவாக்கத்திற்கான வழி நடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதியாக்கப்படும் என்றுஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அந்தஅறிக்கை ஏற்கெனவே பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அதுகடந்தபுதன்கிழமை இறுதியாக்கப்பட்டிருந்திருந்தால் சம்பந்தர் எதிர்பார்த்ததுபோல இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஏதோ ஒரு முனை வெளிப்பட்டிருந்திருக்கும். ஆனால் அப்படிஎதுவும் நடக்கவில்லை. கடந்தடிசம்பர் மாதம் பத்தாம் திகதிவழிநடத்தற் குழுவின் இடைக்காலஅறிக்கைசமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதுநடக்கவில்லை. ஏறக்குறையஐந்துமாதங்கள் பிற்போடப்பட்டபின் கடந்த புதன்கிழமை அது இறுதியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுநடக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை ஐம்பத்தேழாவது தடவையாக வழிநடத்தற்குழு கூடியது. இடைக்கால அறிக்கை தொடர்பில் வரும் 23ம் திகதிகட்சிகள் தமதுமுடிவுகளைத் தெரிவிப்பதாகவும் அதிலிருந்து நான்கு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளைநடத்தி இடைக்கால அறிக்கையை இறுதி செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திலிருந்துபிற்போடப்பட்டுவரும் இடைக்காலஅறிக்கையின் இறுதிவடிவமானது இனிமேலும் குறித்தொதுக்கப்பட்டநாளில் வெளிவருமா? என்பதைபொறுத்திருந்தேபார்க்கவேண்டும். ஆனால் நிச்சயமாகசம்பந்தர் சொன்னஇரண்டுவாரகாலப் பகுதிக்குள் அதுநடக்கப்போவதில்லை. அதுமட்டுமல்லமேதினக் கூட்டங்களுக்குப் பின்னரானஅரசியற்ச் சூழலைகருதிக் கூறின் நிச்சயமின்மைகளேஅதிகம் தெரிகின்றன. இது பற்றிசம்பந்தரும் பிரஸ்தாபித்திருக்கிறார். மேதினக் கூட்டங்களின் பின் அரசாங்கம் யாப்புருவாக்கவிடயத்தில்பின்வாங்கும் ஆபத்து இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேதினக் கூட்டங்களைவைத்துப் பார்த்தால் மகிந்ததொடர்ந்தும் பலமாகவுள்ளார் என்றேஎடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. மகிந்தவின் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் எல்லாருமேஅவருக்குவாக்களிக்கப் போவதில்லைதான். அவர்கள் மத்தியில் காசுக்காகவும்,குடிக்காகவும்,வேறுசலுகைகளுக்காகவும் வந்தவர்களும் உண்டு. ஆனாலும் அதில் கலந்துகொண்டஎல்லாரையுமேஅப்படிக் கூறிவிடமுடியாதுஎன்பதனைமகிந்தவின் எதிரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். கடந்தஆண்டுநுகேகொடைவிலும் மகிந்தஒருமக்கள் எழுச்சியைநிகழ்த்திக் காட்டினார். அதன்பின் நிகழ்ந்த கூட்டுறவுச்சபைத் தேர்தல்களிலும் அவர் வெற்றியைப் பெற்றுக் காட்டினார். இப்பொழுதுமேதினக் கூட்டத்திலும் தனதுபலத்தைஎண்பித்திருக்கிறார். இதுஅரசாங்கத்திற்கும் அதிர்ச்சிதான். மேற்குநாடுகளுக்கும், இந்தியாவிற்கும் அதிர்ச்சிதான். இதுயாப்புருவாக்கநடவடிக்கைகளைபாதிக்கும். உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களைநடாத்துவதுதொடர்பானஅரசாங்கத்தின் முடிவுகளிலும் தாக்கங்களைஏற்படுத்தும்.

ஐரோப்பியஒன்றியம் அரசாங்கத்திற்கு ஜி.பி.எஸ் பிளஸ் சலுகையைவழங்கிஅதன் மூலம் அரசாங்கத்தின் அந்தஸ்தைஉலகஅரங்கில் உயர்த்தமுற்பட்டது.யாப்புருவாக்கசெயற்பாடுகளில் அரசாங்கத்தைமேலும் பலப்படுத்த ஜி.பி.எஸ்.பிளஸ் சலுகைஉதவக்கூடும் என்றஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் மேதினக் கூட்டம் உள்நாட்டில் அரசாங்கத்தைபலவீனப்படுத்தியுள்ளது. ஏற்கெனவேமகிந்தவைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கானதீர்வின் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டுவந்தஅரசாங்கம் இனிமேல்யாப்புருவாக்கமுயற்சிகளில் எவ்வாறுநடந்துகொள்ளும்?புதியபயங்கரவாததடைச்சட்டத்தைஅமைச்சரவையில் சமர்ப்பித்தபொழுது கூட்டமைப்பின் பரிந்துரைகளைஅரசாங்கம்புறக்கணித்திருப்பதை இங்குசுட்டிக் காட்டவேண்டும்.

இனப்பிரச்சினைக்கானஒருதீர்வைக் கண்டுபிடிப்பதுஎன்பது இனவாதத்தைஎப்படிக் கையாள்வதுஎன்பதுதான். ஆயுதப் போராட்டமானது இனவாதத்தைபோரின் மூலம் தோற்கடிக்கமுற்பட்டது. ஆனால் சம்பந்தர் அப்படிச் சிந்திக்கவில்லை.இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளாமல் அதற்குள் பிளவைஏற்படுத்திஅதிலிருக்கக்கூடியமென்போக்குவாதிகளோடுசேர்ந்துகடும்போக்குவாதிகளைபலவீனப்படுத்துவதேஅவருடையஉத்தியாகக் காணப்படுகிறது. கடந்தஎட்டாண்டுகளாகஅவர் தமிழ் அரசியலைசெலுத்திவரும் பாதைஅதுதான். இது சம்பந்தரின் சிந்தனைமட்டுமல்ல. மேற்குநாடுகளும் அப்படித்தான் சிந்திக்கின்றன. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளினால் அதுமறுபடியும் எழுச்சிபெற்றுசீனாவைதன் மடியில் தூக்கிவைத்துவிடும் என்றுமேற்குநாடுகள் சிந்திக்கின்றன. எனவே இனவாதப் போக்குக் குறைந்தசிங்களத் தரப்பையும்,தமிழ், முஸ்லீம்,மலையகத் தரப்பையும் இணைத்துகடும்போக்கு இனவாதிகளைசிறுபான்மையினராக்குவதுஎன்றஒருதிட்டத்தைமுன்வைத்தேமேற்குநாடுகளும் செயற்படுகின்றன.

ஆனால் இந்தஉத்தியில் ஓர் அடிப்படைப் பலவீனம் உண்டு. இலங்கைத் தீவில் பேரினவாதம் எனப்படுவதுபல நூற்றாண்டுகளாகநன்குநிறுவனமயப்பட்டஒன்று. ஆட்சிப் பொறுப்புக்குவரும் எவரும் அதன் கைதிகள்தான். இந்தகட்டமைப்பில்மகிந்தஒருமுனையில் நிற்கிறார் என்றால் மைத்திரிமற்றொருமுனையில் நிற்கிறார். மகிந்தகடும் மீசையோடுவிறைப்பாகவிட்டுக்கொடுப்பின்றிகாட்சிதருகிறார். மைத்திரியோஒருசாதுவாகஅப்பிராணியாகத் தோன்றுகிறார். ரணில் பெருமளவிற்குமேற்குமயப்பட்டஆங்கிலம் பேசும் ஒருமேட்டுக்குடியினராகத் தோன்றுகிறார். ஆனால் யார் எப்படித் தோன்றினாலும்,எதைக் கதைத்தாலும் நன்குநிறுவனமயப்பட்டிருக்கும் ஒருகட்டமைப்பின் பிரதிநிதிகளாகவேசெயற்படமுடியும். கடந்தஈராண்டுகாலரணில் – மைத்திரிஆட்சியே இதற்குஎடுத்துக்காட்டுஆகும். பாதுகாப்புக்கொள்கை,காணிக்கொள்கை,யுத்தவெற்றிகளைப் பாதுகாப்பது,வெற்றிவீரர்களைப் பாதுகாப்பது,மகாசங்கத்தினரைக் கையாள்வதுபோன்றஅடிப்படையானவிவகாரங்களில்ஆட்சிமாற்றத்தின் பின்னரும் அடிப்படையானமாற்றங்கள் எவையும் நிகழவில்லை. அப்படிநிகழவும் முடியாது. ஒருமைத்திரிநல்லவர் போலத் தோன்றுவதனால் அவரைநம்பி ஓருநல்லசெய்திவரும் என்றுகாத்திருக்கமுடியாது. அப்படிநம்புவதுஎன்பது இலங்கைத்தீவின் பேரினவாதத்தைபிழையாகவிளங்கிக் கொள்வதுதான். அதுநன்குநிறுவனமயப்பட்டஒருகட்டமைப்பு. தனிப்பட்டதலைவர்களால் சீர்திருத்தங்களைச் செய்யமுடியும். ஆனால் அடிப்படையானமாற்றங்களைச் செய்யமுடியாது. பல நூற்றாண்டுகளாகநிறுவனமயப்பட்டிருக்கும் ஒருகட்டமைப்பைமாற்றுவதென்றால் அதற்குநிறுவனமயப்பட்டஓர் உழைப்புத் தேவை.

மைத்திரியையும்,ரணிலையும் இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்புக்குபுறத்தியானவர்களாகபார்ப்பதுஎன்பதேஓர் அடிப்படைத் தவறு. அவர்கள் இருவரும் இனவாதமயப்பட்டஒருகட்டமைப்புக்குள் நின்றுகொண்டுஅதற்குவெளியேநிற்பவர்களைப் போலஒருபொய்த்தோற்றத்தைகாட்டுகிறார்கள். இதைமைத்திரியும்,ரணிலும்தான் புதிதாகச் செய்கின்றார்கள் என்பதல்ல. இலங்கைத்தீவின் நவீனஅரசியலில் இதற்குமுன்னரும் சிலதலைவர்கள் இப்படித் தோன்றியிருக்கிறார்கள். எந்த இனவாதக் கட்டமைப்பின் கைதிகளாகஅவர்கள் காணப்பட்டர்களோஅதேகட்டமைப்பிற்குபுறத்தியாகவும் தங்களைக் காட்டிக்கெண்டார்கள். சந்திரிக்காஅதைத்தான் செய்தார். ஜெயவர்த்தனாவும் அதைஓரளவிற்குச் செய்தார். வெளித்தோற்றத்திற்கு ஜெயவர்த்தனதன்னைஒருதர்மிஸ்ரராகஅறிவித்தார். அதேசமயம் அவரதுகட்சிக்குள் காணப்பட்டசிறில் மத்யூ போன்றவர்கள் மூர்க்கத்தனமான இனவாதிகளாகஅடையாளம் காணப்பட்டார்கள். இதில் சிறில்மற்யூ வேறு ஜெ.ஆர் வேறுஎன்பதல்ல. இருவருமேஒன்றுதான். இனவாதம் ஒருவசதிக்காகஅல்லதுவெளியுலகத்திற்குகாட்டுவதற்காகஅல்லதுதமிழ் மக்களைஏமாற்றுவதற்காகதன்னை இரண்டாகக் காட்டிக் கொள்ளும். ஒருதீர்வுஎன்றுவரும்போதுதான் தரவிரும்பாதஒருதீர்வைமற்றத் தரப்புஅதாவதுகடும்போக்காளர்கள் எதிர்ப்பதாகக் காரணம் காட்டியேநிராகரித்துவிடும் ‘என்னசெய்வதுஅவர்கள் விடுகிறார்கள் இல்லை’என்று இயலாமையுடன் கையைவிரிக்கும். காணிவிடுவிப்புதொடர்பில் அண்மையில் மைத்திரியும் படைத்தரப்பும் மாறிமாறிப் பந்தைக் கடத்தியதை இங்குசுட்டிக்காடவேண்டும்

இப்படிப் பார்த்தால் ஒருகட்டமைப்பின் கைதிகளாகக் காணப்படும் எல்லாச்சிங்களத் தலைவர்களும் அந்தகட்டமைப்பைஉடைக்கமுடியாதவர்கள் தான். யாழ்ப்பாணத்திலிருந்துவெளியிடப்பட்டசிரித்திரன் சஞ்சிகையின் ஆசிரியரானசுந்தர் ஒருஉதாரணத்தைக் கூறுவார். ‘நீருக்குள் மிதக்கும் பனிக்கட்டிகள்’என்று. இது ரணிலுக்கும்,மைத்திரிக்கும் பொருந்தும்.

இந்த இடத்தில் வேறொருஉதாரணத்தையும் சுட்டிக்காட்டலாம். கடந்தஆண்டுயாழ்பாணத்திற்குவந்திருந்தகுவாட்றிக் இஸ்மைல் என்றஒருமுன்னாள் அரசியல் பத்திஎழுத்தாளர் – இ;ப்பொழுதுஅமெரிக்காவில் வசிக்கிறார் – ஒருதனிப்பட்டசந்திப்பின் போதுஎன்னிடம் சொன்னார். ‘மைத்திரிநல்லவராகத் தோன்றுகிறார். இதற்குமுன்பிருந்ததலைவர்களோடுஒப்பிடுகையில் அவர் வித்தியாசமானவர்’என்று. நான் சொன்னேன் ‘இருக்கலாம். ஆனால் அவரும் ஒருகட்டமைப்பின் கைதிதான்’என்று. 1980களில் சண்டேரைம்ஸ் பத்திரிகையில் பிரபல்யமாகஎழுதிக்கொண்டிருந்தவர் குவாட்றிக் இஸ்மைல். இவர் அமெரிக்காவில் குடியேறியபின் 1999ல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தஒருசந்திப்பில் அவரும் கலந்துகொண்டார். அச்சந்திப்பில் கலாநிதிநீலன்திருச்செல்வம் உரையாற்றினார். அந்தஉரையின் போதுஅவர் ஒருவிடயத்தைசுட்டிக் காட்டினாராம்.’சிங்களத் தலைவர்கள் தனிப்பட்டஉரையாடல்களின் போதுநல்லவர்களாகவும்,தாராளத் தன்மைமிக்கவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் பொதுஅரங்கில்;செயற்படும்பொழுதோதலைகீழாகமோசமானஇனவாதிகளாகத் தோன்றுவார்கள்’என்று.

1999ல் கொல்லப்படுவதற்குசிறிதுகாலத்திற்குமுன் கலாநிதிநீலன் வெளிப்படையாகஒப்புக்கொண்டஓர் உண்மைஅது. ஏறக்குறைய 20 ஆண்டுகளின் பின் அதாவது2019 இல் ஐ.நா அரசாங்கத்திற்குவழங்கியகாலஅவகாசம் முடியும் பொழுது; நீலன் கண்டுபிடித்தஅதேஉண்மையை கூட்டமைப்பின் தலைவரும் கண்டுபிடிக்கப் போகிறாரா? அல்லது இன்னும் இரண்டுகிழமைகளில் கண்டுபிடிக்கப்போகிறாரா?

ஆனால் அமைச்சர் மனோகணேசன் கூறுகிறார் கூட்டமைப்பின் தலைமைதனதுமக்களுக்குஉண்மைகளைச் சொல்வதில்லைஎன்றதொனிப்பட. அண்மையில் லண்டனில் கூட்டமைப்பின் லண்டன் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தஒரு கூட்டத்தில் உரையாற்றும் பொழுதேமனோகணேசன் இப்படிக் கூறியிருக்கிறார். மிகவும் அடர்த்திகுறைந்தஒருதீர்வேதமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது என்ற தொனிப்பட அவர் மேலும் கூறியுள்ளார். ஏறக்குறைய அவர் சொல்வதைத்தான் மற்றொரு அரசாங்கப் பிரமுகரான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணவும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் பிரதானிகளே இப்படி வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தமிழ்த்தலைவர்கள் ஏன் சாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

Spread the love
 
 
      

Related News

1 comment

ராஜன். May 8, 2017 - 8:57 am

மேதினத்துக்கு பின்னரான அரசியலில் ச. சு. வின் அரசியல் சாஸ்திரம் பலிக்குமா, தமிழ் மக்கள் கேணையர்களாக இருக்கும்வரை பலித்தது போல் தெரியும் ஆனால் பலிக்காது , பதவிக்கும் பணப் பெட்டிக்கும் விலை போகத தலைவன் பிரபாகரனா ச. சு. இனவாதத்தை பகை நிலைக்குத் தள்ளாமல் அதற்க்குள் பிளவை ஏற்படுத்தி அதிலிருக்க கூடிய மென் போக்கு வாதிகளோடு சேர்ந்து கடும் போக்குவாதிகளை பலவீனப்படுத்துவதே அவருடைய உத்தியாக காணப்படுகின்றதாம் , இது எப்படி இருக்குதென்றால் வெண்னையை கொக்குவின் தலையில் வைக்க வேண்டுமாம் அது வெய்யிலுக்கு உருகி கொக்குவின் கண்ணை மறைக்குமாம் அதன் பின் கொக்குவை சுலபமாக பிடித்து விட முடியுமாம், சிங்கக் கொடியை தூக்கிபிடித்து, சத்தியக் கடதாசி கொடுத்து , சிங்கள கொலையரசு தினத்தில் பங்கேற்று, போர்குற்ற விசாரணையிலிருந்து ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகைவரை சிங்களத்துக்கு ஆதரவு வளங்கிய காக்கைவன்னியர்களை தமிழ் மக்கள் இனியும் நம்பமுடியுமா. ராஜன்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More