இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக பயணத்தினை முன்னிட்டு இந்திய உலங்குவானூர்திகள் இரண்டு நேற்றையதினம் ஒத்திகைபார்த்த வேளை 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானூர்திகள் இறங்கியமையால், மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதால் வீடுகளின் கூரைப் பகுதிகள் காற்றில் பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 12 ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமர் மோடி மலையகம் செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.