கேரளாவில் 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஐஎஸ் வட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஹரிஸ் மஸ்தான் என்ற கேரள இளைஞர் அவரது விருப்பமின்றி, உள்நோக்கத்துடன் ஐஎஸ்ஸின் வட்ஸ் அப் குழுவில் தான் இணைப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து Nடீமற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேற்படி விடயம் தெரிய வந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவின் திரிகரிபூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஷித் அப்துல்லா என்ற இளைஞரால் உருவாக்கப்பட்ட வட்ஸ் அப் குழுவில் கேரளாவைச் சேர்ந்த 211 இளைஞர்கள் இணைப்பட்டுள்ளனர் எனவும் அந்த குழுவில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய அக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.