Home இலங்கைஇலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க பிரித்தானியா முயற்சிக்கும் – தொழிற்கட்சி

by admin


இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு பிரித்தானியா முயற்சிக்கும் என பிரித்தானிய தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்தில் பிரித்தானியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதனை ரத்து செய்யப் போவதாக தொழிற் கட்சியின் தலைவர் ஜெரோம் கோர்பின் (Jeremy Corbyn) , புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என பிரித்தானிய தொழிற் கட்சி உறுதியளித்துள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More