Home இலங்கைமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன:-

மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன:-

by admin

மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்படவுள்ளன.

வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ள மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பௌத்த மாநாயக்க தேரர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டு என்ன காரணத்திற்காக இடைநிறுத்தப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More