இலங்கை

வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம்

வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். வட மத்திய மாகாண சபையில் தான் வகித்து வந்த அமைச்சுப் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும்  விலகுவதாக  முன்னாள் வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் தெரிவித்திருந்தார்.

வட மத்திய மாகாண சபையின் அமைச்சராகவிருந்த கே.எச். நந்தசேனவை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து முன்னறிவித்தல் இன்றி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே எஸ்.எம். ரஞ்ஜித் தனது பதவி விலகியிருந்தார்.

எஸ்.எம் ரஞ்சித் இன் பதவிவலகல் காரணமாக ஏற்பட்ட பதவி வெற்றிடம் காரணமாக வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன பதவிப் பிரமாணம்  செய்து  கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply