தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 2 நாட்களாக நடைபெற்றுவந்த . இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 24ம்திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தொழிற்சங்க ஊழியர்கள் – அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள உயர்வு, ஓயவூதியம் , நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் உறுதி அளித்ததாக தொழிற்சங்க முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.