குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹெய்ட்டியை கோரமாக தாக்கிய சூறாவளி காரணமாக 1.4 மில்லியன் மக்கள் பாதிக்ப்பட்டுள்ளனர். மத்யூ என்ற சூறாவளி தாக்குதலினால் ஹெய்ட்டியில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பாதிப்புக்களினால் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அவசர உதவி வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இதுவரையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என எதிர்பார்க்;கப்படுகிறது.
ஹெய்ட்டியின் சில நகரங்கள் முற்று முழுதாக அழிந்து விட்டதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் மூன் தெரிவித்துள்ளார். ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.