அரசியல் அமைப்பு தயாரிக்கும் பணிகள் காலம் தாழ்த்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு இது குறித்து தாம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என ஜப்பானிய பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் அரசியல் சாசனம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளை மேலும் மேலும் காலம் தாழ்த்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். 2015ம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் எனவும் நாட்டில் மீளவும் யுத்தம் உருவாகுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.