இலங்கை

அமைச்சரவை மாற்றம் மிகவும் அத்தியாவசியமானது – மஹிந்த அமரவீர


அமைச்சரவை மாற்றம் மிகவும் அவசியமானது என மீன்பிடித்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாவிட்டால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தமது அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனை செய்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என தெரிவித்துள்ள அவர் முடிந்தளவு துரித கதியில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கட்சி கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகள் அவர்களுக்கு உள்ளேயேயும், சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகள் அவர்களுக்கு உள்ளேயும் மாற்றிக்கொள்ளப்படும் என்ற தகவல்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் அவ்வாறான ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடன் கலந்தாலோசித்து எவரையும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply