குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டம் குறித்த உத்தேச வரைவு அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் தலைமையிலான குழுவொன்றினால் இந்த உத்தேச சட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் மனித உரிமை நியமங்களை பின்பற்றவும் கூடிய வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டத்தை தேசியப் பாதுகாப்பு குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.