இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று அசாம் மாநிலத்துக்கு செல்லவிருந்த நிலையில் அங்கு மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது தாலா-சதியா இடையே கட்டப்படும் இந்தியாவிலேயே மிகப பெரிய பாலத்தின் திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ள நிலையில் மோடி அதனை திறந்து வைப்பதற்காக இன்று அசாம் செல்லவுள்ளார்.
இந்த நிலையில் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம பொருள் வெடித்ததாகவும் இதில் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்வம் எண்ணெய் திருடும்போது நடந்ததா அல்லது தீவிரவாதிகள் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கொண்டார்களா என்பது குறித்தும், வருகையை சீர்குலைக்கும் வகையில் சதி திட்டத்தில் ஈடுபட்டார்களா? என்றும் பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.