மீட்பு மற்றும் தேடுதலில் ஈடுபடும் 7 வெளிநாட்டு குழுக்கள் இலங்கையில் கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு கிளையின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இந்த வெளிநாட்டுக் குழுக்கள் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகளை ஆரம்பித்துள்ளன.
குடிநீரும், உணவு அல்லாத பொருட்களுமே பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளாக காணப்படுகின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
முழுமையான பாதிப்புக்களை இதுவரையில் மதிப்பீடு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.