Home இலங்கைபாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் நிவாரணங்களை வழங்கியுள்ளது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் நிவாரணங்களை வழங்கியுள்ளது

by admin


மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கி உள்ளது.

இந்த உதவிகளை வழங்குவது குறித்து சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong  மற்றும் வெளிவிவகார அமைச்சர் Dr Vivian Balakrishnan   ஆகியோர் கடிதங்களை இலங்கை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகள் கவலையளிப்பதாக  தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More