Home இலங்கைசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு

by admin


சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 109 ஆக காணப்படுகின்றதுடன் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 6000 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் அனர்த்தம் காரணமாக சுமார் 5 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீரற்ற காலநிலையிலும்  தொடர்ச்சியாக எரிபொருட்களை வழங்க விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தினால் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More