ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் மட்டக் குழுவொன்றிற்கு இலங்கையைச் சேர்ந்த ராதிகா குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். மியன்மாரில் உண்மையைக் கண்டறியும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவில் இவ்வாறு ராதிகா உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா ஜாய்சிங், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டொமினிக் சிடோடி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இந்த மூவர் அடங்கிய குழுவிற்கு இந்திரா ஜாய்சிங் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளின் போது மியன்மார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மியன்மாரில் வாழ்ந்து வரும் ரொஹினிய முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.