169
அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தயாசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மூன்று அமைச்சரவை இணைப் பேச்சாளர்கள் இனி வரும் காலங்களில் கடமையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மற்றும் பாராளுமன்ற விவகார மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தற்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக கடமையாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love