ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பாரிய குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்ததாகவும் அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலோனோர் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எ;னற போதிலும் சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளதால் அவர்கள்தான் இந்த தாக்குதலையும் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் நேரப்படி, காலை 8.25 மணிக்கு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதனால் ஏராளமான கார்கள் தீயில் எரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில்தான் அதிபர் மாளிகை, மற்றும் இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள நிலையில் யாரை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை