குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசாங்கம் புதிய அரசியல் சாசனத்தை அமுல்படுத்த முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியும் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என ஜயம்பதி விக்ரமரட்ன கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.