1924ம் ஆண்டு வெள்ளப் பாதுகாப்புச் சட்டம் திருத்தியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்திற்கு பதிலீடாக வெள்ள முகாமைத்துவ சட்டமொன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா இது தொடர்பிலான யோசனையை அமைச்சரவையில் சமர்பித்துள்ளார். துறைசார் அமைச்சர்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அடையாளப்படுத்த அனுமதிக்கப்படும் எனவும், அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் பகுதிகளுக்கு நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு பாதுகாப்பு வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பாதுகாப்பு தொடர்பிலான சட்டம் மிகவும் பழமையானது எனவும் அதனை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.