Home இந்தியாசென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளது:-

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளது:-

by admin

தமிழ்நாடு சென்னையில் தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடத்தின் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் கட்டடத்தின் வலிமை குறைந்து இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நேற்று அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் சிக்கிக் கொண்டிருந்த 14 ஊழியர்களை மீட்டனர். தீ விரைவாக பரவி வருவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகைமூட்டமானது எனவும் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகே இருக்கும் குடியிருப்புவாசிகள் நேற்றே வெளியேற்றப்பட்டு தீயை அணைக்க ராட்சத கிரேன்கள், நுரைக்கலவை எந்திரம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன.  எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், கட்டடம் இடியத் தொடங்கியதாகவும் தற்போது கட்டடத்தின் முன்பகுதி, உள்பகுதிகள் இடிந்து விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More