சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து, பங்களாதேஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி களமிறங்கிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 305 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் தமீம் இக்பால் 128 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் லியம் பிலன்கட் 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஜோ ரூட் ஆட்மிழக்காது 133 ஓட்டங்களையும், அலெக் ஹேல்ஸ் 95 ஓட்டங்களையும், இயோர் மேர்கன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். போட்டியின் ஆட்ட நயாகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.