இலங்கையில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டின் பல பகுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் இவ்வாறான அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பெருமளவான உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்த நிலையில், வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் அதிகளவில் பரவக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலைமை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் உற்பத்தியாகி நோய் பரவக்கூடும் எனவும் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.