இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. தேசிய ஆட்பதிவு திணைக்களம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அடையாள அட்டை காணாமல் போனமை குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதன் மூலம் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பிலான விண்ணப்பப்படிவங்களை கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாள அட்டை கோருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.