209
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பிலான சாட்சியங்களை மூடி மறைத்தார் என அனுர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாஜூடீன் கொலை குறித்த விசாரணைகளுக்காக அனுர சேனாநாயக்க கடந்த ஓராண்டுக்கு மேல் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்றைய தினம் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டது.
Spread the love