காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் நிருபர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாக பாகிஸ்தான் அரசு கூறி இருப்பது குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல முடியாது என்றும், இந்த பிரச்சினைக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புவதாகவும், ஆனால் தீவிரவாத செயல்கள் நடைபெறும் போது பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
00
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் வெளிநாட்டினர் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில் பாகிஸ்தானிய குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களைக் கைது செய்தமை தொடர்பில் உள்ளூர் போலீஸ் அதிகாரி கரன் சிங் தெரிவிக்கும் போது இவர்களிடம் விசா உள்ள போதும் தடை செய்யப்பட்ட பகுதியில் அரசின் முன்அனுமதி பெறாமல் நுழைந்துள்ளமை காரணமாகவே கைது செய்துள்ளதாக தெரிவித்தார். விசா விதிகளை மீறிய இவர்களிடம் விசாரணை மேறடகொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.