குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சில விசாரணைகள் தொடர்பில் சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் படையதிகாரிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ விசாரணைக்கு அழைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டால் அது குறித்து ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் பல அமைச்சர்கள் வேறு அமைச்சுக்களின் வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலையில் பௌசீ மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் படையதிகாரிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட முன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.