விளையாட்டு

சுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிப்பு

suresh-reina
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இந்திய அணியின் நட்சத்திர ஒருநாள் கிரிக்கட் வீரர் சுரேஸ் ரய்னா வைரஸ் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ரஞ்சி கிண்ணப் போட்டியிலும் ரய்னா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் ரய்னா இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமே சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் இறுதியாக பங்கேற்றிருந்தார். அதன் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரய்னா மீளவும் உள்ளுர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியதனைத் தொடாந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எனினும் காய்ச்சல் காரணமாக ரய்னா முதல் இரண்டு போட்டிகளிலும் பங்குபற்ற மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரய்னாவிற்கு பதிலீடாக யார் விளையாடுவார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply