Latest headlines
-
LATESTConservatives largest party, but short of a majority.
-
RESULT06:25 Crewe & Nantwich
-
RESULT06:20 Ceredigion
-
RESULT06:17 Newcastle-under-Lyme
பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன நிலையில், பிரதமர் திரேசா மே தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. மொத்தமாக 650 ஆசனங்களுக்காக நேற்றைய தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் இதுவரையில் 313 ஆசனங்களை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுள்ளது.
இதில் கன்சர்வேட்டிவ் கட்சி 314 ஆசனங்களையும், தொழிற் கட்சி 261ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. SNP 35, LD – 12, DUP – 10 ஏனையவை 13 என ஆசனங்களைப் பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு பெரும்பான்மை ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக்கொள்ளாத நிலைமை உருவாகக் கூடும் என ஏற்கனவே அரசியல் விமர்சனங்கள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. பிரிடெக்ஸின் பின்னர் பிரதமர் திரேசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்த எடுத்தத் தீர்மானத்திற்கு அமைய நேற்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டது.