தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்திக் கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் காமினி லொக்குகே நாட்டின் மெய்யான பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியைத் தழுவுவோம் என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம் அதனை ஒத்தி வைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கம் ஞானசார நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க ஞானசார தேரர் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் – காமினி லொகுகே
Jun 9, 2017 @ 13:45
நான்கு பொலிஸ் குழுக்களை நியமித்து ஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டார். கூட்டு எதிர்கட்சி இன்று கொழும்பில் நடாத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துவெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னர் ஞானசார தேரரை பாவித்தே இவர்கள் முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்தார்கள் எனவும் இப்போதும் அதே வேலையைதான்; செய்ய எத்தனிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ்,முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நல்லுறவை பேணி வாழவேண்டும் என்பதே கூட்டு எதிர்கட்சியின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.