1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் நுவான் வெடிசிங்க இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நினைவஞ்சலி நிகழ்வுகளின் போது பல் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.