வெளிவிவகார அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளிநாடுகளுக்கு லொத்தர் சீட்டு விற்பனை செய்யப் போகின்றாரா என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய நிறுவனங்களை உள்வாங்கும் வகையில் வர்த்தமானியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் நிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்ததாகவும் நிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த நிறுவனங்களை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை நகைப்பிற்குரியது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.