உலகம்

ஈராக்கிய இடம்பெயர் முகாமில் தங்கியிருந்த மக்கள் உட்கொண்ட உணவு விசமாகியதில் பாதிப்பு


ஈராக்கின் மொசூல் நகரில் இடம்பெயர் முகாம் ஒன்றில் தங்கியிருந்த மக்கள் உட்கொண்ட உணவு விசமாகியதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடம்பெயர் முகாமில் உணவை உட்கொண்ட நூற்றுக் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

ரமழான் நோன்பு திறப்பதற்காக பயன்படுத்திய உணவே இவ்வாறு விசமாகியுள்ளது. வாந்தி, வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்களினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மொசூலுக்கும் இர்பிலுக்கும் இடையில் காணப்படும் பகுதியில் அமைந்துள்ள இடம்பெயர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறுமியொருவர் கொல்லப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரின் தொண்டு நிறுவனமான ருடாவ் என்ற நிறுவனம் உள்ளுர் ஹோட்டல் ஒன்றிலிருந்து இந்த மக்களுக்கு உணவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply