Home இலங்கைமுதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்.குடாவில் பூரண கடையடைப்பு. போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் – கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு:-

முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்.குடாவில் பூரண கடையடைப்பு. போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் – கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு:-

by admin

முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டள்ளது.

குறித்த பகுதிகளில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தது.

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது.

 

முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது:-

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More