அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ரஸ்யா மீது பிரயோகிக்கும் அழுத்தங்கள் குறித்து இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்கள், ஐரோப்பாவின் சக்தி வள நிரம்பலை பாதிக்கும் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
ரஸ்ய எரிபொருள் மற்றும் எரிவாயு திட்டங்களில் பங்களிப்பு வழங்கி வரும் ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனவும் அது ஐரோப்பாவிற்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தும் எனவும் ஜெர்மனியும், ஒஸ்ட்ரியாவும் குற்றம் சுமத்தியுள்ளன.
உக்ரேய்னில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் ரஸ்யாவின் வகிபாகம் காரணமாக மேற்குலக நாடுகள் ரஸ்யா மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீட்டுக்கு தண்டனையாக அமெரிக்கா புதிதாக ரஸ்யா மீது பொருளாதார நெருக்குதல்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.