Home இலங்கைசில ஊடகங்கள் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சி – ஜனாதிபதி

சில ஊடகங்கள் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சி – ஜனாதிபதி

by admin

 
பாடசாலை சீருடையில் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அஸ்கிரிய சந்திரானாந்த வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடைகளில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலத்தில் இணைய தளமும் முகநூலும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.  சில ஊடகங்கள் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும்; தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் செயற்பட்டால் அது அவர்களது நாகரீகத்தையும் கல்வித்தகமையையும் பறைசாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More