178
நூறு நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உனாமெக்குலே சந்தித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.
Spread the love