குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் பலம்பொருந்திய இந்திய அணியை வீழ்த்தி, சர்வதேச ஒருநாள் தர வரிசையில் 8ம் நிலை வகித்து வந்த பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்திய அணியை 180 ஓட்டங்களினால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி போட்டியில் வெற்றியீட்டியது. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில் இந்தியா வெற்றியீட்டி, பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் பாகர் ஸமான் 114 ஓட்டங்களையும், முஹமட் ஹாபீஸ் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், யாதேவ் மற்றும் ஹிர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் ஹிர்திக் பாண்டியா 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் அமர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.