குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ மேஜர் உட்பட இராணுவப் புலனாய்வு உறுப்பினர்கள் 6 பேர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஊடகவியலாளர் கீத் நோயர், 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தி நேசன் நாளிதழின் பிரதி ஆசிரியராக இருந்த கீத் நோயர் 2008ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை இவரது கடத்தல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது