Home இலங்கைஅரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜே.வி.பி.

அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜே.வி.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்ததனைப் போன்று இந்த அரசாங்கத்தையும் தோற்கடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் தேர்தல் வாக்குறுதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான முதல் மக்கள் போராட்டம் விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள் தண்டிக்கப்படுவர் என இந்த அரசாங்கம் தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடும்போக்காளர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More