குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. மிக நீண்ட காலமாக இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் ஜப்பானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் விரிவான அடிப்படையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.