ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் எதிர்வரும் 30ம் முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்குமாறு தெரிவித்தே வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தத்தில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.