இலங்கை

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நள்ளிரவு முதல் இந்தப் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா, காலி, கண்டி உள்ளிட்ட முக்கிய தபால் நிலையக் காரியாலயங்கள் சுற்றுலாத்துறை கட்டடங்களாக மாற்றப்படுவதற்கும் தபால் ஊழியர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply